பார்சிலோனா:
ஆல்காடெல் நிறுவனத்தின் ஐந்து புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் இரண்டு புதிய டேப்லெட்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆல்காடெல் புதிய ஸ்மார்ட்போன்கள் 5, 1X, 3, 3X மற்றும் 3V என்றும் இரண்டு டேப்லெட்கள் 1T 7 மற்றும் 1T 10 என அழைக்கப்படுகின்றன.
ஆல்காடெல் 5 அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது. பெசல் லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் 1440x720 பிக்சல், IPS டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 சிப்செட், 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி + 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஆல்காடெல் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆல்காடெல் 3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1440x720 பிக்சல் IPS டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6739 சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் சிம் ஸ்லாட், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆல்காடெல் 3X ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் 1440x720 பிக்சல் IPS டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6739 சிப்செட், 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, கைரேகை சென்சார், இன்டெர்னல் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஆல்காடெல் 3V ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 2K (2160x1080 பிக்சல்) IPS டிஸ்ப்ளே, 12 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, குவாட்கோர் பிராசஸர், கைரேகை சென்சார், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, முக அங்கீகார வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஆல்காடெல் வெளியிட்டதில் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக ஆல்காடெல் 1X 5.3 இன்ச், 18:9 ரக டிஸ்ப்ளே, 16 எம்பி பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாத வாக்கில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
ஆல்காடெல் 1T 10 மற்றும் 1T 7 டேப்லெட்களும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மூலம் இயங்குகிறது. ஆல்காடெல் 1T 10 டேப்லெட்டில் 10.1 இன்ச் IPS டிஸ்ப்ளே, 1280x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 5 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா, 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 1 ஜிபி ரேம், குவாட்கோர் மீடியாடெக் MT8321 பிராசஸர் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
1T 7 மாடலில் 7.0 இன்ச் TFT, 1024x600 பிக்சல் டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் 8321A/D பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, 2 எம்பி பிரைமரி கேமரா, வி.ஜி.ஏ. செல்ஃபி கேமரா, 2580 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும் கொண்டுள்ளது.