தொழில்நுட்பம்

இந்தியாவில் மோட்டோ ஸ்மார்ட்போன் விலை ரூ.1,000 குறைப்பு

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. #MotorolaOnePower

மாலை மலர்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் பவர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. 

லெனோவோவின் முதல் ஆன்ட்ராய்டு ஒன் சாதனம் இந்தியாவில் ரூ.18,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

பிளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கும் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் முன்னதாக ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் விலை ரூ.1,000 குறைக்கப்படுவதுடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதனுடன் மாதம் ரூ.2,500 வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்தும் வாடிக்கையாளர்கள் புது மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனினை பெற்றுக் கொள்ளலாம்.

மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்

- அட்ரினோ 509 GPU

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை நீட்டிக்கும் வசதி

- டூயல் சிம் ஸ்லாட்

- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

- 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12μm பிக்சல்

- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.0μm பிக்சல், 4K வீடியோ

- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25μm பிக்சல்

- கைரேகை சென்சார்

- P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்

- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டூயல் மைக்ரோபோன்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி