தொழில்நுட்பம்

இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்

மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. #Motorola #Smartphones

மாலை மலர்

மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இவை ஏற்கனவே எஃப்.சி.சி. வலைத்தளத்தில் வெளியான ரென்டர்களுடன் ஒற்றுப் போகும் வகையில் காட்சியளிக்கிறது.

எனினும், இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களில் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதை தெரியப்படுத்தியுள்ளது.

மேலும் மோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களில் பெரிய நாட்ச் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களில் பின்புற பிரைமரி கேமராவும், மோட்டோ ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

புதிய மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

- 6.24 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே

- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்

- அட்ரினோ 512 GPU

- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி 

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- டூயல் சிம் ஸ்லாட்

- ஆண்ட்ராய்டு 9.0 பை

- 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75 

- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2

- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

- கைரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

- டர்போ சார்ஜிங்

மோட்டோ ஜி7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

- 6.24 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்

- அட்ரினோ 506 GPU

- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி 

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- டூயல் சிம் ஸ்லாட்

- ஆண்ட்ராய்டு 9.0 பை

- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8 

- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2

- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.1

- கைரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

- டர்போ சார்ஜிங்

மோட்டோ ஜி7 பிளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

- 5.7 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 2.5D டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்

- அட்ரினோ 506 GPU

- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி

- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- டூயல் சிம் ஸ்லாட்

- ஆண்ட்ராய்டு 9.0 பை

- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0 

- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

- கைரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

- டர்போ சார்ஜிங்

மோட்டோ ஜி7 பவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 2.5D டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்

- அட்ரினோ 506 GPU

- 2 ஜி.பி., 3 ஜி.பி., 4 ஜி.பி. ரேம்

- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- டூயல் சிம் ஸ்லாட்

- ஆண்ட்ராய்டு 9.0 பை

- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0 

- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

- கைரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புகைப்படம் நன்றி: droidshout