சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 8 மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அறிமுக தினம் தொடங்கி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 8 மாடல்கள் முன்பதிவு தொடங்கிய 72 மணி நேரத்திலேயே 2,71,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவில் இது சாம்சங் நிறுவனத்தின் முந்தைய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விட அதிகம் ஆகும்.
இதுகுறித்து சாம்சங் வெளியிட்ட தகவல்களின் படி, புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த முன்பதிவில் 45 சதவீத யூனிட்கள் 2-ஆம் கட்ட நகரங்கள் மற்றும் சிறு பிராந்தியங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி புதிய பிரீமியம் பிரிவில் இடம்பெற்றுள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வாங்க வழக்கமான மெட்ரோ பகுதிகளை தவிர்த்து பரவலாக பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் வரை ஆர்வம் அதிகரித்து வருவது தெரிகிறது.
கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா ரூ. 1,99,999
கேலக்ஸி Z ஃபோல்டு 8 ரூ. 1,79,999
கேலக்ஸி Z ஃப்ளிப் 8 ரூ. 1,24,999
கடுமையான விலையை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு சந்தையிலேயே முதல் முறையாக முன்பணம் இல்லாமலேயே வாங்கும் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆகஸ்ட் 08-ஆம் தேதி தொடங்குகிறது.