மொபைல்ஸ்

Exynos Chip கொண்ட புதிய ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்

புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படடுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய 'ஃபேன் எடிஷன்' மாடலாக கேலக்ஸி S26 FE இந்திய சந்தையிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S26 FE மாடலின் அடுத்த தலைமுறை மாடலாக வருகிறது.

புதிய கேலக்ஸி S26 FE மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.7-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2500 பிராசசரால் இயக்கப்படுகிறது. மேலும், இதில் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S26 FE சிறப்பு அம்சங்கள்:

டூயல் சிம் (நானோ + நானோ) வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி S26 FE, ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 9 மூலம் இயங்குகிறது. இதற்கு ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,900 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் கூடிய 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த மாடலில், 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எக்சைனோஸ் 2500 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது 8GB ரேம் மற்றும் 256GB என ஒற்றை மெமரி வேரியண்டில் கிடைக்கிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி S26 FE-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் OIS வசதியுடன் கூடிய 50MP வைட் கேமரா, 12MP அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் OIS மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் வசதியுடன் கூடிய 8MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். மேலும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஜெமினி ஓம்னி சப்போர்ட் உடன் வருகிறது, இதன் மூலம் கேலரியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கவும் எடிட் செய்யவும் முடியும். கனெக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct மற்றும் ப்ளூடூத் 5.4 ஆகியவை அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி, 45W வயர்டு சார்ஜிங் உடன் 4,900mAh பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் சப்போர்ட் உடன் வருகிறது. மேலும், இது IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S26 FE விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போனின் 8GB ரேம் மற்றும் 256GB மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மெமரி அடிப்படையில் ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது. மேலும், இந்த மாடல் பிஸ்தா, புளூபெர்ரி மற்றும் கிராஃபைட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ் செய்யும்போது ரூ. 8,000 வரையிலான போனஸ் பெற முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவன (NBFC) சேவைகள் மூலம் 30 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியையும், அதனுடன் கூடுதலாக ரூ. 3,000 வரை போனஸ் பெற முடியும்.

இத்துடன் வாடிக்கையாளர்கள் முக்கிய வங்கி கார்டுகள் மூலம் ரூ. 7,000 கேஷ்பேக் அல்லது 12 மாத வட்டியில்லா வங்கி மாத தவணை முறையை தேர்வு செய்யலாம். சாம்சங்கின் இ-ஸ்டோர் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 18 மாத வங்கி மாத தவணை முறையையும் தேர்வு செய்யலாம்.

SCROLL FOR NEXT