ஒரு சாதாரண ஸ்மார்ட்போனை விட மேலான அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து ரெட்மி அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் ரெட்மி டர்போ 5.
இந்த ஸ்மார்ட்போன் செயல்திறனை மையமாக கொண்ட பிராசஸரை ஒரு பெரிய பேட்டரியுடன் இணைக்கிறது. இதில் 120Hz AMOLED டிஸ்ப்ளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த போன் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரிக்கிறது.
இந்த நிலையில், அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தீபாவளி எடிஷன் விற்பனையின் போது ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனை சற்றே குறைந்த விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது 7,540mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஒரு சக்திவாய்ந்த கேமிங் பிராசஸருடன் வருகிறது. இவை அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ரெட்மி பிரான்டு, டர்போ 5 ஸ்மார்ட்போனை ஜூன் 2026-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. முதன்மை விலை கொடுக்காமல் செயல்திறனை விரும்பும் பயனர்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 பிராசஸர், ஒரு பெரிய பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அமேசான் சிறப்பு விற்பனையின் போது, ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 54,999-இல் இருந்து ரூ. 35,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ரூ. 19,000 சேமிக்க முடியும். வாங்குபவர்கள் வங்கி சார்ந்த சலுகைகள் மூலம் கூடுதல் தள்ளுபடிகளை பெற முடியும்.
இந்த விலை, ரூ. 40,000-க்குக் கீழ் அதிக செயல்திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை தேடும் எவருக்கும் ரெட்மி டர்போ 5-ஐ ஒரு சிறந்த தேர்வாக மாற்றுகிறது.
டிமென்சிட்டி 8500-அல்ட்ரா சிப்செட் இந்த ஸ்மார்ட்போனின் தனித்துவ அம்சமாக நிற்கிறது. இது 4nm செயல்முறையில் உருவாக்கப்பட்டு, 12GB வரையிலான LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. தீவிர பயன்பாட்டின் போது வெப்பநிலையை குறைவாக வைத்திருக்க, இந்த ஸ்மார்ட்போனில் ஐஸ்லூப் கூரிங் சிஸ்டமும் உள்ளது.