சியோமி நிறுவனம் சமீபத்தில் தனது புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை வெளியிட்டு இருந்தது. டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் "மேக்ஸ்" என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் பெயரை உறுதிப்படுத்தி இருக்கிறது.
அதன்படி புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் என அழைக்கப்படுகிறது. 10,000mAh பேட்டரியுடன் அறிமுகமான முதல் ரெட்மி ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் பகிர்ந்தள்ள டீசரில் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதுதவிர புதிய டீசரில் ஸ்மார்ட்போன் பற்றிய எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. மேலும், இந்த ஸ்மார்ட்போன் மேக்ஸ் பிரான்டிங் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
சமீபத்தில் 10,000mAh பேட்டரியுடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 10,000mAh சிலிகான் கார்பன் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இத்துடன் 100 வாட் சார்ஜிங் வழங்கப்படலாம்.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் 27 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.