சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பெரிய ஸ்கிரீன் மற்றும் அளவில் பெரிய பேட்டரியுடன் இந்த ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட டாப் எண்ட் மாடல் போன்ற அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் 6.99 இன்ச் OLED 2396x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் மூலம் இயங்குகிறது. இத்துடன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
6.99 இன்ச் 2396x1080 பிக்சல் FHD+OLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர்
அட்ரினோ 613 GPU
6 ஜிபி, 8 ஜிபி ரேம்
அதிகபட்சம் 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ். 3
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ்
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் (IP65)
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
யு.எஸ்.பி. டைப் சி
8000mAh பேட்டரி
45வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
புதிய ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 1228 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 30,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், வங்கி சலுகைகளை சேர்க்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 24,999 முதல் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்குகிறது.