மொபைல்ஸ்

விரைவில் இந்திய வெளியீடு: சட்டென புது ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்ட சியோமி

இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய பேட்டரியுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மாரட்போன் ஆகஸ்ட் 06-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இம்மாத தொடக்கத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. “mAhster Edition,” என குறிப்பிடப்படும் இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய பேட்டரியுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து சியோமி இந்தியா வலைதளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8000mAh பேட்டரி வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட 7-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் டெக்ஸ்சர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் வட்ட வடிவ கேமரா மாட்யூலை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் ஜென் 4 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமராவுடன் வரும் என்று தெரிகிறது.

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் மாத மதத்தியில் இதன் விற்பனை தொடங்கும் என தெரிகிறது. இதன் விற்பனை அமேசான் இந்தியா வலைதளம், சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறும்.