மொபைல்ஸ்

10,000mAh பேட்டரியுடன் உருவான புது ரெட்மி ஸ்மார்ட்போன் - விரைவில் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 17 ஓ.எஸ். கொண்டிருக்கும் என்று கூறப்பிடுகிறது.

ரெட்மி நிறுவனம், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் ரெட்மி K100 ப்ரோ மற்றும் K100 ப்ரோ மேக்ஸ் மாடல்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியது . தற்போது, ​​ரெட்மி K100 மாடலும் இந்த மாதம், அக்டோபர் 28 அன்று, அவற்றுடன் இணைய தயாராகி வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் தோன்றி, இதுவரை அறியப்பட்ட தகவல்களுக்கு மேலும் பல விவரங்களை சேர்த்துள்ளது.

கீக்பென்ச் பட்டியலின் படி, வரவிருக்கும் புது ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வரும் என்று தெரிகிறது. இந்த சிப்செட் சியோமி M786BC என சீன நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது 16 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 17 ஓ.எஸ். கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறது.

ரெட்மி K100 அம்சங்கள்:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி K100 மாடலில் 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, அதிக ரிப்ரெஷ் ரேட், 40-க்கும் மேற்பட்ட கேம்களுடன் செயல்படும் என்று ரெட்மி கூறுகிறது. மேலும், கேமிங் தொடர்பான கூடுதல் பணிகளைக் கவனித்துக்கொள்ள, இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேகமான D2 டிஸ்ப்ளே சிப் இடம்பெற்றுள்ளது.

பேட்டரிதான் இதன் முக்கிய அம்சமாகத் தெரிகிறது, ஏனெனில் இது ஒரு பிரம்மாண்டமான 10,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதன் உயர் ரக மாடல்களான ரெட்மி K100 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றையும் மிஞ்சுகிறது; அந்த இரண்டு மாடல்களிலும் முறையே 8,580mAh மற்றும் 9,070mAh பேட்டரிகள் உள்ளன.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்கான IP68 சான்று கொண்டிருக்கிறது. விலையை பொறுத்தவரை, இதன் ரெட்மி K100 மாடலின் ஆரம்ப விலை தோராயமாக 3,500 யுவான்கள் இந்திய மதிப்பில் ரூ. 49,566 வரை இருக்கும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT