ரெட்மி நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸட் மாத வாக்கில் இந்திய சந்ைதையில் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 6s Gen 3 பிராசஸர் கொண்டிருந்தது.
இந்த நிலையில், ரெட்மி பிரான்டின் புதிய 15 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 15A 5ஜி என அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் மைக்ரோசைட் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் பேட்டரி, டிசைன் உள்பட சில விவரங்கள் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் புதிய ரெட்மி 15A 5ஜி ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
சியோமி நிறுவனத்தின் துணை பிரான்டு ரெட்மி தனது முற்றிலும் புதிய ரெட்மி 15A 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 27-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் 5ஜி சிப்செட், 6300mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் 32MP பிரைமரி ஏ.ஐ. கேமரா, இரண்டாவது லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படலாம். இதன் ரியர் பேனல் ஃபிளாட் டிசைன் கொண்டிருக்கும் என்றும் செவ்வக கேமரா ஐலேண்ட் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்ோபனின் கீழ் நிலைநிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 14,999 எனும் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.