மொபைல்ஸ்

8000mAh பேட்டரியுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய P சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ரியல்மி P4s 5ஜி என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் P4 சீரீசில் எட்டாவது மாடல் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதில் ஏற்படும் வெப்பத்தை கட்டுப்படுத்த வேப்பர் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7000 சீரிஸ் சிப்செட், 8000mAh பேட்டரி, 80 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

ரியல்மி P4s சிறப்பு அம்சங்கள்:

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி P4s 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யு.ஐ. 7 ஓ.எஸ். உடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஓ.எஸ். அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அபிடேட்கள் வழங்குவதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் 1.5K 1272x2772 பிக்சல் சாம்சங் M14 AMOLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDR10+, அதிகபட்சம் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இத்துடன் IP66 + IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி P4s ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட், ஹைப்பர் விஷன்+ ஏ.ஐ. சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 12 ஜிபி LPDDR4x ரேம், 14 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன், 256 ஜிபி UFS3.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 80 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 5, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போர்ட், eidou, GPS, GLONASS, Galileo, மற்றும் QZSS வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை விவரங்கள்:

ரியல்மி P4s ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34,999 என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37,999 என்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 3-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் சியான் மற்றும் டைட்டானியம் கிரே என இருவித நிறங்களில் கிடைக்கிறது.