ரியல்மி நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ஸ்மார்ட்போன்களில் ரியல்மி யு.ஐ.-க்கு பதிலாக ஒப்போவின் கலர்ஓ.எஸ். 17-ஐ விரைவில் அறிமுகப்படுத்த இருப்தாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்கால ஸ்மார்ட்போன்கள் கலர்ஓ.எஸ். 17 உடன் வெளியிடப்படும் என்றும், தகுதியுள்ள தற்போதைய சாதனங்களும் எதிர்கால ஓ.எஸ். அப்டேட்கள் மூலம் இந்த மென்பொருளைப் பெறும் என்றும் ரியல்மி இந்தியா உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த நடவடிக்கை, மென்பொருள் உருவாக்கத்தை எளிமையாக்கவும், மேம்படுத்தல் செயல்முறையை நெறிப்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், எந்த ரியல்மி ஸ்மார்ட்போன் இந்த புதிய இயங்குதளத்துடன் முதலில் அறிமுகமாகும் என்பதை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
கலர்ஓ.எஸ். 17:
ஜிஎஸ்எம்அரினா அறிக்கையின்படி , இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள், ரியல்மி யுஐ-க்கு பதிலாக கலர்ஓ.எஸ். 17-இல் இயங்கும் என்று ரியல்மி இந்தியா தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளை குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரியல்மி யுஐ ஒப்போவின் மென்பொருள் தளத்துடன் இணைக்கப்படும் என்று கூறிய முந்தைய அறிக்கையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனது ஸ்மார்ட்போன் சீரிஸ் முழுவதும் மென்பொருள் உருவாக்கத்தை நெறிப்படுத்தவும், மென்பொருள் அப்டேட்களை எளிதாக்கவும் இந்த மாற்றம் நோக்கமாக கொண்டுள்ளது என்று ரியல்மி இந்தியா கூறியதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது. இருப்பினும், கலர்ஓ.எஸ். 17 உடன் முதலில் வெளிவரும் வரவிருக்கும் மாடல் எது என்பதை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
ரியல்மி யுஐ மற்றும் கலர்ஓ.எஸ். ஏற்கனவே ஒரே மாதிரியான இடைமுகம் மற்றும் அம்சங்களை கொண்டிருப்பதால், இந்த மாற்றம் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தில் பெரிய மாற்றங்களை கொண்டுவர வாய்ப்பில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. மேலும், 2020-இல் நிறுவனம் ரியல்மி யுஐ-ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, ஆரம்பகால ரியல்மி ஸ்மார்ட்போன்கள் கலர்ஓ.எஸ். உடன் வெளியிடப்பட்டன என்றும் அது சுட்டிக்காட்டியது.