மொபைல்ஸ்

மீண்டும் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்திய ரியல்மி

கடந்த வாரம் இந்த மாடலின் விலை ரூ. 1000 அதிகரிக்கப்பட்டது.

ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் தனது ரியல்மி 16 ப்ரோ பிளஸ், ரியல்மி 16 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்தியது. இந்த நிலையில், தற்போது மேலும் சில மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய விலை உயர்வின் போது ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைந்த நிலையில், தற்போது விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் விலை உயர்த்தப்பட்ட ரியல்மி 16 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த மாடலின் விலை ரூ. 1000 அதிகரிக்கப்பட்டது.

ரியல்மி 16 ப்ரோ:

இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 31,999 துவக்க விலையில் விற்பனைக்கு வந்தது. அதன்பிறகு பலமுறை விலை உயர்த்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39,999 என அதிகரித்தது. பிறகு, இதன் விலை ரூ. 37,999 என மாறியது. தற்போது இதன் விலை ரூ. 40,999 என மாறியுள்ளது. இது ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலுக்கானது ஆகும்.

விலை உயர்வு காரணமாக தற்போது ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே, நீண்ட பேட்டரி பேக்கப், அதிக ஒலியெழுப்பும் ஸ்பீக்கர்கள் மற்றும் உறுதியான வடிவமைப்பு கொண்டுள்ளது.

புதிய விலை:

ரியல்மி 16 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 40,999

ரியல்மி 16 ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 43,999

ரியல்மி 16 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 46,999

மற்ற மாடல்கள்:

ரியல்மி 16 ப்ரோ மட்டுமின்றி ரியல்மி 16 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 என்றும் இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 41,999 என்றும் மாறியுள்ளது.

இதேபோல் ரியல்மி சி83 5ஜி மாடலின் விலை ரூ. 17,499 என்று மாறியுள்ளது. இந்த மாடல் ரூ. 13,499 விலையில் அறிமுகமாகி பின் இதன் விலை ரூ. 16,499 ஆக உயர்த்தப்பட்டு தற்போது மீண்டும் இதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.