மொபைல்ஸ்

Realme | செல்ஃபி மிரர், 7000mAh பேட்டரி... அடுத்த வாரம் இந்தியா வரும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும்.

மாலை மலர்

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் 16 சீரிசில் புதிய ஸ்மார்ட்ோபன் இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 16 5ஜி என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. விற்பனை தொடங்கும் முன்பு ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 02-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

புதிய ரியல்மி 16 ஸ்மார்ட்போன் மொபைல் போட்டோகிராஃபி மற்றும் கன்டன்ட் கிரியேஷனை சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதன்படி இந்த மாடலில் புதிய கேமரா ஹார்டுவேர் மற்றும் ஏ.ஐ. சார்ந்த இமேஜிங் மென்பொருள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் 50MP சோனி சென்சார் கொண்ட பிரைமரி கேமரா மற்றும் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. ரியர் செல்ஃபி மிரர் அம்சத்திற்காக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இது பயனர்கள் அதிக ரெசல்யூஷன் கொண்ட பின்புற கேமரா மூலமாகவும் பயனர்கள் அதிக தரமான செல்ஃபிக்களை எடுக்க வழிவகை செய்யும்.

இத்துடன் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் பில்ட்-இன் ரிங் ஃபிளாஷ் உடன் வருகிறது. இது குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் பயனர்கள் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும். பேட்டரியை பொருத்தவரை ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இவற்றுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஏ.ஐ. சார்ந்த பல்வேறு மென்பொருள் அம்சங்களுடன் வெளியாகிறது.