போக்கோ X8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மார்ச் 17-ஆம் தேதி இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ப்ரோ சீரிசில்- X8 ப்ரோ மற்றும் X8 ப்ரோ மேக்ஸ் என இரு மாடல்கள் உள்ளன. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் தொடங்கியது.
புதிய போக்கோ X8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மூன்று வித வண்ணங்கள் மற்றும் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இரு மாடல்களிலும் மீடியாடெக் நிறுவனத்தின் சக்திவாய்ந்த பிராசஸர்கள் உள்ளன. இத்துடன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 வழங்கப்பட்டுள்ளன.
போக்கோ X8 ப்ரோ சீரிஸ் அம்சங்கள்:
புதிய போக்கோ X8 ப்ரோ மாடலில் 6.59 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், போக்கோ X8 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.83 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் முறையே மீடியாடெக் டிமென்சிட்டி 8500-அல்ட்ரா பிராசஸர், மாலி-G720 MC8 GPU மற்றும் மீடியாடெக் டிமென்சிட்டி 9500 பிராசஸர், இமார்டலிஸ்-G925 MC11NPU 890 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க போக்கோ X8 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 20MP செல்ஃபி கேமரா செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ். 3, இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
போக்கோ X8 ப்ரோ மாடலில் 6500mAh பேட்டரி, 100 வாட் ஹைப்ர் சார்ஜ், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட், 27 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. போக்கோ X8 ப்ரோ மேக்ஸ் மாடலில் 8500mAh பேட்டரி, 100 வாட் ஹைப்பர் சார்ஜ், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட், 27 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் சலுகை விவரங்கள்:
போக்கோ X8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 32,999 என்றும் டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35,999 என்றும் போக்கோ X8 ப்ரோ 5ஜி அயன் மேன் எடிஷன் ரூ. 37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.
போக்கோ X8 ப்ரோ மேக்ஸ் மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 42,999 என்றும் டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 46,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மற்றும் எஸ்.பி.ஐ. கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.