போக்கோ நிறுவனத்தின் X8 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் செப்டம்பரில் அறிமுகமாகிறது. அறிமுக தேதியுடன் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் பின்புற டிசைனை அம்பலப்படுத்தும் டீசர் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், சார்ஜிங் விவரங்களும் டீசர் வீடியோவில் தெரியவந்துள்ளது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 6.83 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் புதிய போக்கோ X8 பவர் 5ஜி மற்றும் போக்கோ X8 5ஜி ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 04-ஆம் தேதி அறிமுகமாகும் என போக்கோ இந்தியா தெரிவித்துள்ளது. இந்த இரு மாடல்களும் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மேலும், இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல்களுக்கான மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது.
போக்கோ X8 5ஜி மாடலில் அதிகபட்சமாக 9000mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 3.2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 67 வாட் சார்ஜிங் மற்றும் 22.5 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
போக்கோ X8 பவர் 5ஜி மாடலில் அதிகபட்சம் 10,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 3.5 நாட்களுக்கு பிளேபேக் வழங்கும். இத்துடன் 100 வாட் வயர்டு சார்ஜிங், 27 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் பைபாஸ் சார்ஜிங், பி.பி.எஸ். சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளன.
அதிகாரப்பூர்வ டீசர் வீடியோவின் படி போக்கோ X8 மால் ஆரஞ்சு மற்றும் வைட் நிறங்களிலும், இதன் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதேபோல் போக்கோ X8 பவர் 5ஜி மாடல் எல்லோ ஃபினிஷ் மற்றும் பிளாக் சதுரங்க வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டுள்ளது.