மொபைல்ஸ்

Oppo | பட்ஜெட் பிரிவில் பெரிய பேட்டரி... மாஸ் காட்டும் புது ஒப்போ ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மாலை மலர்

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. A சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் ஒப்போ A6s 5ஜி என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், டூயல் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

இத்துடன் சமீபத்திய பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய ஒப்போ ஸ்மார்ட்போனிலும் சற்றே அதிக திறன் கொண்ட பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி ஒப்போ A6s 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மற்றும் 80 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை 1-இல் இருந்து 41 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும்.

ஒப்போ A6s 5ஜி அம்சங்கள்:

6.75 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1570x720 பிக்சல் ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட்

6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

ஆண்ட்ராய்டு சார்ந்த கலர் ஓ.எஸ். 15

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா

2MP இரண்டாவது லென்ஸ்

16MP செல்ஃபி கேமரா

5ஜி, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., வைபை

யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

7000mAh பேட்டரி

80 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரஙகள்:

புதிய ஒப்போ A6s 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 20,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேப்புசினோ பிரவுன் மற்றும் ஐஸ் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

அறிமுக சலுகையாக ஒப்போ A6s 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 1,000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.பி.ஐ. கார்டுகள், கோடக் மஹிந்திரா வங்கி, ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் பேங்க், பி.ஓ.பி. கார்டுகள், யெஸ் வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் டி.பி.எஸ். பயன்படுத்தும் போது மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.