ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2025-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்ஷனாக, ஒன்பிளஸ் 16 மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன், அதன் முந்தைய மாடலை போலவே சதுர வடிவ பின்புற கேமரா பம்ப் கொண்டுள்ளது.
இத்துடன் மேம்படுத்தப்பட்ட சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றை வழங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன், இந்த மாத இறுதியில் மூன்று வண்ண தேர்வுகள் மற்றும் நான்கு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அந்நாட்டில் விற்பனைக்கு வர உள்ளது.
ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் சமீபத்திய ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சீரிஸ் சிப்செட் மூலம் இயங்குகிறது, இது 2nm முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒப்போவின் சமீபத்திய கலர்ஓஎஸ் 17 உடன் வருகிறது. இது 185Hz வரை ரிஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இத்துடன் 6.78-இன்ச் ஃபுல்-HD+ 1272x2772 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP66 + IP68 + IP69 + IP69K தரச்சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 16 மாடல் ஒப்போவின் லூமோ இமேஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இதில், டூயல்-ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதியுடன் கூடிய 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு கேமரா, 120x டிஜிட்டல் ஜூம் மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் வசதியுடன் கூடிய 50MP டெலிபோட்டோ கேமரா இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில், இது 50MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் 9000mAh பேட்டரியுடன் வருகிறது. இத்துடன் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. மேலும், கனெக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 6.0, ஒரு USB டைப்-C போர்ட், GPS, GLONASS, BeiDou, QZSS மற்றும் Galileo ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதில் உள்ள சென்சார்களின் பட்டியலில் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப் மற்றும் பாதுகாப்புக்காக இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் ஆகியவை அடங்கும். இதன் பரிமாணங்கள் 161.42 x 76.67 x 8.55 மிமீ மற்றும் இதன் எடை சுமார் 220 கிராம் ஆகும்.
ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் 12GB ரேம் மற்றும் 256GB மெமரி மாடல் விலை CNY 5,999 (சுமார் ரூ. 86,000) இல் தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் 12GB + 512GB மற்றும் 16GB + 512GB ரேம் மற்றும் மெமரி மாடல்களின் விலை முறையே CNY 6,799 (சுமார் ரூ. 97,000) மற்றும் CNY 7,499 (சுமார் ரூ. 1,07,000) ஆகும். இறுதியாக, உயர் ரக 16GB + 1TB மாடலின் விலை CNY 8,499 (சுமார் ரூ. 1,21,000) ஆகும்.