மொபைல்ஸ்

இந்தியாவில் ஒன்பிளஸ் 13s புது வேரியண்ட் அறிமுகம் - விலை மற்றும் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் தற்போது இந்திய சந்தையில் ஒரு புதிய மெமரி வேரியண்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன், ஃபிளாக்ஷிப் சீரிசின் ஒரு பகுதியாக கச்சிதமான ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தனது சிறிய வடிவமைப்பு மற்றும், ஃபிளாக்ஷிப் ஹார்டுவேர் உள்ளிட்டவைகளை சற்றே குறைந்த விலையில் வழங்கியதற்காகவும் தனித்து நின்றது. 16 ஜிபி வேரியன்ட் சேர்க்கப்பட்ட பிறகு, ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் இப்போது மூன்று மெமரி ஆப்ஷன்களில் வருகிறது.

மற்ற ஹார்டுவேர் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியேதான் இருக்கின்றன, ஆனால் கூடுதல் ரேம் மற்ற மாடல்களை காட்டிலும் சிறந்த செயல்திறன் வழங்கும். சந்தையில் 13s மாடலை தக்கவைத்து கொள்வதற்கு, இப்போது 16 ஜிபி மாடலை அறிமுகப்படுத்துவது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒரு வியூகமாக இருக்கலாம்.

ஒன்பிளஸ் 13s 16ஜிபி + 512ஜிபி விலை:

ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம், 512ஜிபி மெமரி வேரியண்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 68,999 ஆகும். இதை அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் தளங்களில் வாங்கலாம். இந்த வேரியண்ட் பிளாக் வெல்வெட் மற்றும் கிரீன் சில்க் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

இது 13s வரிசையிலேயே மிகவும் விலையுயர்ந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மேலும் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54,999 என்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13s சிறப்பு அம்சங்கள்:

ஒன்பிளஸ் 13s மாடலில் 6.32-இன்ச் 1.5K 1216×2640 பிக்சல் LTPO ProXDR AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது அடாப்டிவ் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,600 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. சிறிய போன்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு கச்சிதமான டிஸ்ப்ளே ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

புகைப்படம் எடுக்க ஒன்பிளஸ் 13s மாடலில் 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இதில் 32MP கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,850mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13s மாடல் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஆக்சிஜன்ஓஎஸ் 15 உடன் வெளியானது. இது நான்கு ஓஎஸ் அப்டேட்களையும் ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச்களை பெறுவதால், இந்த ஸ்மார்ட்போன் நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பானது.

SCROLL FOR NEXT