நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் (4b) மாடலை அறிமுகம் செய்தது. பிரத்யேக வடிவமைப்பு, அசத்தலான டிசைன் கொண்டிருக்கும் புது ஸ்மார்ட்போன் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்.இ.டி. இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 45 மினி-எல்.இ.டி.க்கள் ஐந்து சதுரங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களில் உள்ளதைவிட 40% வரை அதிக பிரகாசமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
RCB எடிஷன்:
இந்த மாடலில் IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டான்டர்டு எடிஷனுடன் நத்திங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி நத்திங் போன் (4b) RCB எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றதை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
நத்திங் போன் (4b) அம்சங்கள்:
6.77 இன்ச் 1080x2344 பிக்சல் FHD+AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 பிராசஸர்
அட்ரினோ 810 GPU
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
8 ஜிிபி ரேம், 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த நத்திங் ஓஎஸ் 4.1
டூயல் சிம் ஸ்லாட்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP64)
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 6
யுஎஸ்பி டைப் சி
6000mAh பேட்டரி, 33 வாட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
புதிய நத்திங் போன் (4b) மாடல் பிளாக், வைட் மற்றும் ஸ்டிரைக்கிங் புளூ நிறத்தில் கிடைக்கிறது.
இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 14-ஆம் தேதி முதல் நாடு முழுக்க சிில்லறை விற்பனை மையங்கள் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.