மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.
வெளியீட்டு தேதி:
புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஜூலை 15-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது.
அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாட் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், சதுரங்க வடிவ கேமரா மாட்யூல் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் லைட் புளூ மற்றும் கிரீன் என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
அம்சங்கள்:
மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், குவாட் ஹெச்.டி. பிளஸ் LTPO பேனல், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.