மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ ஜி77 பவர் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் மூன்றுவித பேன்டோன் நிற ஆப்ஷன்கள் மற்றும் ஒற்றை ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் கிடைக்கிறது.
புதிய மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 59 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இத்துடன் மீடியாடெக் பிராசஸர், இரட்டை பிரைமரி கேமரா யூனிட் போன்ற வசதிகள் உள்ளன.
அம்சங்கள்:
மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் 1080x2400 பிக்சல் எல்.ச.டி. டச் ஸ்கிரீன், அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹெலோ யுஐ ஓஎஸ் உடன் வருகிறது. மேலும், ஒரு வருடத்திற்கான ஓ.எஸ். அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை செக்யூரிட்டி பேட்ச் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் புது மோட்டோ ஸ்மார்ட்போனில் 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 பிராசஸர், ARM மாலி-G57 MP2 GPU, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி என ஒற்றை மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் வரையிலான வயர்டு சார்ஜிங் வசதி, 6 வாட் வரை ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்.டி.இ., டூயல் பேன்ட் வைபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போர்ட், ஜிபிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன.
விலை மற்றும் விற்பனை:
இந்திய சந்தையில் புதிய மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 25,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஆக்சிஸ் வங்கி அல்லது ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2000 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இத்துடன் ரூ. 2000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
புது ஸ்மார்ட்போன் பேன்டோன் ஃபுச்ஸியா ரெட், பேன்டோன் இம்பெனிட்ரபில் மற்றும் பேன்டோன் நாட்டிக்கல் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 13-ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது.