மொபைல்ஸ்

7000mAh பேட்டரியுடன் விரைவில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புது ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பிரபலமான G சீரிஸ் மாடல் ஆகும். இது மோட்டோ G மேக்ஸ் என அழைக்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மோட்டோ g57 பவர் மாடலில் உள்ளதை போன்றே கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

வடிவமைப்பு:

புதிய மோட்டோ G மேக்ஸ் ஸ்மார்ட்போன் பேன்டோன் ஸ்டார்கேசஸர், பேன்டோன் மலகா மற்றும் பேன்டோன் அலாஸ்க் புளூ என மூன்று புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6.72 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெட் ரேட். கார்னிங் கொரில்லா கிளாஸ்7i பாதுகாப்பு, MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியுன் வருகிறது.

புகைப்படங்கள்:

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP சோனி LYT-600 பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ மற்றும் 16MP செல்ஃபி கேமராவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 4 பிாசஸர், அதிகபட்சம் 8 ஜபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இதன் 7000mAh பேட்டரி இருக்கும். இது ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 3 நாட்களுக்கு தேவையன பேட்டரி பேக்கப் வழங்கப்படலாம்.

விற்பனை விவரம்:

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். உடன் வரும் என்றும் இந்த மாடல் 2 ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்கிரேடுகள், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்ஸ்ட் 14-ஆம் தேதி வெளியீட்டிற்கு பிறகு மோட்டோரோலா, ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.