மொபைல்ஸ்

7000mAh பேட்டரியுடன் அறிமுகமான புது மோட்டோ ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, 30 வாட் டர்போ பவர் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் இரண்டாவது மேக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.

புதிய மோட்டோ ஜி மேக்ஸ் மாடலில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் நிறுவனத்தின் சிப்செட், அதிகபட்சமாக 7000mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் 1080x2400 பிக்சல் Full HD+ LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 4 சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, விர்ச்சுவல் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹெல்லோ யுஐ கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக மோட்டோ தெரிவித்துள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத் 5.1, ஜி.பி.எஸ்., 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் IP64 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் MIL-STD-810H தரத்திற்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, 30 வாட் டர்போ பவர் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

விலை விவரங்கள்:

புதிய மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேன்டோன் அலாஸ்கன் புளூ, பேன்டோன் மலாகா மற்றம் பேன்டோன் ஸ்டார்கேசர் நிறங்களில் கிடைக்கிறது.