லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் என அழைக்கப்படுகிறது. ஸ்மார்ட் சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் 6.75 இன்ச் HD+ 90HZ LCD ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.
இத்துடன் UNISOC 9863A SOC, 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம், ரேம் எக்ஸ்பான்ஷன் மற்றும் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 13MP பிரைமரி கேமரா, ஏஐ கேமரா, HDR, போர்டிரெயிட் மற்றும் நைட் மோட் அம்சங்கள், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் அம்சங்கள்:
6.75 இன்ச் 720x1600 பிக்சல் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா-கோர் 28nm UNISOC 9863A பிராசஸர்
PowerVR GE8322GPU
4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன்
டூயல் சிம் ஸ்லாட்
13MP பிரைமரி கேமரா, ஏஐ கேமரா, எல்இடி ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப.எம். ரேடியோ
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
யுஎஸ்பி டைப் சி
5000mAh பேட்டரி, 10 வாச் சார்ஜிங்
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் நீலகிரி புளூ மற்றும் ஹிமாலயன் சில்வர் என இரு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனுக்கு ஒரு வருட வாரண்டி, வீட்டிலேயே இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது.