மொபைல்ஸ்

ரூ. 8599 விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவிதமான நிறங்களில் விற்பனைக்கு வருகிறுது.

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட்போன் ஐடெல் செனோ 100 ப்ரோ என அழைக்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4ஜி கனெக்டிவிட்டியுடன் கிடைக்கிறது.

அம்சங்கள்:

ஐடெல் செனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், DTS சவுண்ட் தொழில்நுட்பம் கொண்ட ஒற்றை ஸ்பீக்கர், ஸ்கிரீனில் அழைப்புகள், நோட்டிபிகேஷன் மற்றும் பேட்டரி விவரங்களை காண்பிக்கும் டைனமிக் பார் இடம்பெற்றுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இத்துடன் ஐ.ஆர். பிளாஸ்டர் உள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஏ.சி., டி.வி போன்ற சாதனங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும். பொதுவாக இரு மின்சாதனங்களுக்கு ரிமோட் கண்ட்ரோல் செய்ய முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் டி7100 பிராசஸர் மூலம் இயங்குகிறது. இத்துடன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி உள்ளது. இதில் உள்ள ரேமை 5 ஜிபி நீட்டிக்கும் வசசதி வழங்கப்படுகிறது. இதில் உள்ள சிப்செட் என்ட்ரி லெவல் செயல்திறனுக்கு நிகரானது ஆகும். இதை கொண்டு அன்றாட பயன்பாடுகளான அழைப்புகள், வாட்ஸ்அப் சாட் மற்றும் மீடியா பார்க்கலம்.

புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் ஓ.எஸ். மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மாரட்போனுடன் சார்ஜரும் சேர்த்தே வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

ஐடெல் செனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொமெட் ஆரஞ்சு, பிளாக் மற்றும் கிளவுட் வைட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.