மொபைல்ஸ்

இந்தியாவில் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த இன்பின்க்ஸ்

இந்த மொபைல் 360 டிகிரி ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்பு இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நோட் 60 ப்ரோ பினின்ஃபரினா லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பினின்ஃபரினா நிறுவத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சூப்பர்கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

வடிவமைப்பு:

கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் மெல்லியதாகவும், அதிக உறுதியான அனுபவத்தை வழங்குகிறது. இந்த மொபைல் 360 டிகிரி ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.78 இன்ச் 1.5K AMOLED பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 பிராசஸர், 6500mAh பேட்டரி, 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங், 50MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ பினின்ஃபரினா லிமிட்டெட் எடிஷன் மாடலின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 29-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் இன்பினிக்ஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் நடைபெற உள்ளது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகையாக ரூ. 2000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.