மொபைல்ஸ்

அதிகம் எதிர்பார்க்கப்படும் கேமிங் ஸ்மார்ட்போன் - ரிலீஸ் அப்டேட் கொடுத்த இன்ஃபினிக்ஸ்

புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இன்ஃபினிக்ஸ் நிறுவனம், தனது வரவிருக்கும் புதிய கேமிங் ஸ்மார்ட்போன்: இன்ஃபினிக்ஸ் GT 50 Pro மாடலின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வாமக அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய GT 50 Pro ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்யப்படும். இதன் வடிவமைப்பில் தொடங்கி, கேமிங்கை மையமாக கொண்ட பல அம்சங்களை வழங்கும். சைபர் மச்சா சூப்பர்கார் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் GT 50 Pro டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வடிவமைப்பு மற்றும் விசேஷ அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போனில் எல்.இ.டி. லைட்களும் இடம்பெறும் என்றும் இது இரண்டு வித வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இன்ஃபினிக்ஸ் GT 50 Pro மாடலின் சர்வதேச மாடலுடன் ஒத்துப்போகும் சில முக்கிய அம்சங்களையும் இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இன்ஃபினிக்ஸ் GT 50 Pro ஒரு முக்கிய சிறப்பம்சம் அதன் ஹைட்ரோஃப்ளோ லிக்விட் கூலிங் சிஸ்டம் ஆகும், இது ஒரு மைக்ரோ-பம்ப் லிக்விட்-கூலிங் நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறது. தீவிரமான கேமிங்கின் போது ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை முடிந்தவரை கையாள்வதற்காக இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸ்பிளிசிட் வியூபோர்ட் டிசைனும் உள்ளது, இது பின்புற பேனலில் உள்ள ஒரு பிரத்யேக சாளரத்தின் வழியாக லிக்விட்-கூலிங் சேனல்களைப் பார்க்கும்படி செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மெக்கானிக்கல் லைட்டிங் வேவ்ஸ் அம்சம் உள்ளது. இது, அந்த பிராண்டின் தனித்துவமான GT கிராஸ்ஹேர் பேட்டர்னில் அமைக்கப்பட்ட நான்கு RGB பேட்ஜ்களை கொண்டுள்ளது. உள்வரும் அழைப்புகள், கேமிங் அமர்வுகள் மற்றும் இசை இயக்கத்திற்கு ஏற்ப இந்த ஒளியமைப்பு செயல்படுகிறது. இதில் 14 ஒளி விளைவுகள் மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய எட்டு வண்ணத் தேர்வுகள் உள்ளன.

இன்ஃபினிக்ஸ் GT 50 Pro சிறப்பு அம்சங்கள்:

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது இந்திய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பில் GT 50 Pro-வின் சிறப்பம்சங்களை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

சர்வதேச அளவில், இன்ஃபினிக்ஸ் GT 50 Pro, 1.5K ரெசல்யூஷன் மற்றும் 4,500 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரகாசத்துடன் கூடிய 6.78-இன்ச் AMOLED LTPS டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மையத்தில் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 அல்டிமேட் சிப்செட் உள்ளது, இது கிட்டத்தட்ட அனைத்து விதமான பணிகளையும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த மிட்ரேன்ஜ் சிப்செட் ஆகும்.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 6,500mAh பேட்டரி உள்ளது, இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான XOS 16 இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் ஐந்து OS மேம்படுத்தல்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் வருகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP+8MP கேமராவும், முன்புறம் 13MP கேமராவும் வழங்கப்படலாம்.

SCROLL FOR NEXT