மொபைல்ஸ்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்ட அசத்தல் சலுகைகள்

அமேசான் பே பயனர்கள் பல்வேறு கேஷ்பேக் மற்றும் கட்டண சலுகைகளை பெறலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026, அக்டோபர் 08-ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கும். இந்த வருடாந்திர விற்பனைக்கு முன்னதாக, இந்த தளம் சில சலுகைகளை அறிவிக்க தொடங்கியுள்ளது.

இந்த திருவிழா விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். தகுதியான வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை (EMI) பரிவர்த்தனைகளை பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது பிரைம் உறுப்பினர்கள் கூடுதல் பலன்களை பெறலாம், அதே நேரத்தில் அமேசான் பே பயனர்கள் பல்வேறு கேஷ்பேக் மற்றும் கட்டண சலுகைகளையும் பெறலாம்.

சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்:

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026- ஐ முன்னிட்டு, அமேசான் தனது 'Early Deals' திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு விலைப்பிரிவுகளில் ஸ்மார்ட்போன் சலுகைகளை அறிவித்துள்ளது . ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போனின் உண்மையான விலையான ரூ. 19,999-இல் இருந்து, வங்கி சலுகைகள் உட்பட, தற்போது அது ரூ. 18,499 என்ற விலையில் கிடைக்கிறது.

அதேபோல், iQOO Z10 Lite 5G அதன் அசல் விலையான ரூ. 18,999-இல் இருந்து குறைத்து, ரூ. 15,999-க்கு (வங்கிச் சலுகைகள் உட்பட) வாங்கலாம். iQOO Neo 10, வங்கி சலுகைகளுடன் ரூ. 41,999-க்கு கிடைக்கிறது. மலிவு விலை சாதனங்களை தேடுபவர்கள், ரூ. 12,999-இல் இருந்து குறைத்து, ரூ. 8,729-க்கு பட்டியலிடப்பட்டுள்ள Lava Bold N2 மாடலை பரிசீலிக்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 முன்கூட்டிய சலுகைகளின் ஒரு பகுதியாக மற்ற அக்சஸரீக்களும் விலை குறைப்புடன் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்படி ஒன்பிளஸ் வாட்ச் 2R இப்போது ரூ. 9,999-க்குக் கிடைக்கிறது. A18 ப்ரோ சிப் கொண்ட ஆப்பிள் 2026 மேக்புக் நியோ 13 லேப்டாப் ரூ. 71,990-க்குக் கிடைக்கிறது. மார்ஷல் ஆக்டன் III ஸ்டீரியோ ஹோம் ஸ்பீக்கர்கள் ரூ. 27,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT