மொபைல்ஸ்

8000mAh பேட்டரி, 50MP கேமரா... வேறலெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி!

புது ரியல்மி ஸ்மார்ட்போன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்போனை நார்சோ சீரிஸ் பிரான்டிங்கில் அறிமுகம் செய்தது. நார்சோ 100x என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் மிட் ரேஞ்ச் பிரிவில் நிலைநிறுத்தப்ட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் HD+ 720x1570 பிக்சல் எல்.சி.டி. பேனல், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், ARM Mali G57 GPU, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யுஐ 7 வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிரத்யேக ஏஐ அம்சங்கள் புகைப்படங்களை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும், 45வாட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக இது மிலிட்டரி தர உறுதித்தன்மைக்கான சான்று பெற்றுள்ளது. இத்துடன் IP65 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, பின்புறத்தில் ஏ.ஐ. பல்ஸ் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஓ.எஸ். அப்கிரேடுகளும், மூன்று ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

புதிய ரியல்மி நார்சோ 100x ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22,999 என்றும் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 2000 உடனடி தள்ளுபடி மற்றும் கூப்பன் வடிவில் ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 22-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.