விவோ நிறுவனம் தனது V சீரிஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறனை பலமடங்கு உயர்த்துகிறது. அந்த வரிசையில் விவோ வருகிற செப்டம்பரில் அறிமுகம் செய்ய இருக்கும் விவோ V80 லைட் ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரியுடன் வரும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுதவிர சர்வதேச சந்தையில் (சீனா தவிர்த்து) 10,000mAh பேட்டரியுடன் அறிமுகமாகும் முதல் விவோ பிரான்டு ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெறுகிறது.
தற்போது வரை வெளியாகி இருக்கும் தகவல்களில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் விவோ V80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஃபிளாட் ஃபிரேம், ஃபிளாட் ரியர் பேனல் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், கிரீன் மற்றும் பின்க் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
இத்துடன் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்னதாக விவோ நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்த விவோ Y600 ப்ரோ ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி கொண்டிருந்தது. எனினும், உலக அளவில் இத்தகைய பேட்டரியுடன் அறிமுகமாகும் முதல் விவோ ஸ்மார்ட்போனாக இந்த மாடல் இருக்கும்.
இவைதவிர விவோ V80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரேஷ் டிஸ்ப்ளே, 50MP சோனி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஆரா லைட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், IP68/IP69 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.