தொழில்நுட்பம்

ஏ.ஐ. அம்சங்கள், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியுடன் புது லேப்டாப்களை அறிமுகம் செய்த அசுஸ்

புதிய லேப்டாப் மாடல்கள் ஆன்-டிவைஸ் ஏ.ஐ. வசதிகளை கொண்டிருக்கின்றன.

அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விவோபுக் 14 X 1404MA மற்றும் விவோபுக் 15 X1504MA மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய லேப்டாப்களில் இன்டெல் கோர் 7 சீரிஸ் 3 பிரசஸ்கள், பிரத்யேக நியூரல் பிராசஸிங் யூனிட்கள் வழங்கப்படுகிறது. புதிய லேப்டாப் மாடல்கள் மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வள்ளுநர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

நீண்ட நேட பேட்டரி பேக்கப், மேம்பட்ட தனியுரிமை, மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, ஏ.ஐ. அம்சங்களுடன் குறைந்த எடை கொண்ட மாடலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த மாடல்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

அசுஸ் விவோபுக் 14 & 15 அம்சஙள்:

புதிய விவோபுக் 14 மற்றும் 15 மாடல்களில் இன்டெல் கோர் 7 350 பிராசஸர், பிரத்யேக நியூரல் பிராசஸர் யூனிட்கள் மற்றும் ஆன்-டிவைஸ் ஏஐ அம்சங்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இது மல்டி டாஸ்கிங், அதிவேகமாக பூட் ஆகும் திறன் கொண்டுள்ளது

இத்துடன் ஃபுல் ஹெச்.டி. ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 84 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேஷியோ, ஆப்ஷனல் டச் இன்புட் போன்ற வசதிகள் உள்ளன.

கனெக்டிவிட்டி:

இத்துடன் 720 பிக்சல் ஹெச்.டி. கேமரா, பிரைவசி ஷட்டர் மற்றும் பிரத்யேக கைரேகை சென்சார், சோனிக் மாஸ்டர் ஆடியோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கனெக்டிவிட்டிக்கு வைபை 6, ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்தவரை 42 வாட் ஹவர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. புதிய விவோபுக் மாடல்கள் அமெரிக்க MIL-STD 810H டியூரபிலிட்டி கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

விவோபுக் 15 X1504MA மாடலின் துவக்க விலை ரூ. 75,990 ஆகும். இந்த மாடல் அசுஸ் பிரத்யேக ஸ்டோர்கள், ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விவோபுக் 14 X1404MA மாடலின் விலை ரூ. 1,07,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 26 ஆம் தேதி தொடங்குகிறது.