ஆப்பிள் நிறுவனம் தனது உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டை (WWDC) இந்த வருடம் ஆன்லைனில் நடத்தியது.
இந்நிகழ்வில் ஆப்பிள் சாதனங்களுக்கு வரவிருக்கும் பல புதிய அம்சங்களை அந்நிறுவனம் காணொளி காட்சி மூலம் வெளிப்படுத்தியது.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல நுணுக்கங்களை வலிமொழிந்துள்ளது.
சிரியின் வடிவமைப்பை மேலும் புதிதாக வடிவமைத்து சிரி ஏஐ (Siri Ai) என்று மேம்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் கூகிள்-வுடன் கையெழுத்திட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஜெமினி மாடலை அடிப்படையாகக் கொண்டு சிரியை ஏஐ உடன் இணைத்து ஒரு புதிய கட்டமைப்பை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய சிரி முன்பை விட அதிக உரையாடல் திறன் கொண்டதாகவும், தனிப்பட்ட சூழலைப் புரிந்துகொள்ளும் தன்மையுடையதாகவும் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்துடன் Google lens- ஐ போலவே குரல் உதவியுடன் தேவையான தகல்வல்களை காட்சி நுண்ணறிவு மூலம் தரவல்லது இது.
iPhone, iPad, Mac, Apple Watch, CarPlay மற்றும் Vision Pro ஆகியவற்றில் Siri AI செயல்படும் என்றும் Siri AI உடனான உரையாடல்களை iCloud வழியாக ஒத்திசைக்க முடியும் என்றும் ஆப்பிள் கூறியுள்ளது.