ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ரென்டர் 
தொழில்நுட்பம்

இயர் கப் டிடெக்ஷன் வசதியுடன் உருவாகும் ஆப்பிள் ஹெட்போன்

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன் இயர் கப் டிடெக்ஷன் வசதியுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

ஆப்பிள் நிறுவனம் புதிய ஒவர் இயர் பிரீமியம் ஹெட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஹெட்போன் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் இதன் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளது.

அதன்படி புதிய ஹெட்போனில் உள்ள சென்சார் காதுகளில் வைக்கப்பட்டுள்ளதா இல்லை, கழுத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து இசையை இயக்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதிலுள்ள மற்றொரு சென்சார் இயர்கப்களில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது இயர்கப்கள் எந்த காதில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் ஸ்டீரியோ சவுண்ட் வழங்கும்.

இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே இந்த ஹெட்போனில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் மேக் அல்லது ஐஒஎஸ் சாதனத்துடன் இணைக்கும் போது ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போனிற்கான கஸ்டம் ஈக்வலைசர் செட்டிங்களை இயக்க முடியும்.  

புதிய இயர்போன் லெதர் ஃபேப்ரிக் மற்றும் இதர பொருட்களால் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் வெளியீடு பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும் இதன் விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26,355 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.