ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 
தொழில்நுட்பம்

இன் இயர் வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ இயர்போன் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 24,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் புதிய இன்-இயர் வடிவமைப்பு, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலும் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. 

புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ ஐ.ஒ.எஸ். 13.2, ஐபேட் ஒ.எஸ். 13.2, வாட்ச் ஒ.எஸ். 6.1, டி.வி. ஒ.எஸ். 13.2, மேக் ஒ.எஸ். கேட்டலினா 10.15.1 அல்லது அதற்கு பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது.

ஏர்பாட்ஸ் ப்ரோ இயர்போன் ப்ளூடூத் 5.0 மற்றும் H1 சிப் மற்றும் 10 ஆடியோ கோர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஒவ்வொரு இயர்பட்களும் காதுகளில் சவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட் இரு மைக்ரோபோன்களை பயன்படுத்துகிறது. 

இதனால் பயனர் இருக்கும் சூழலில் அதிகப்படியான சத்தத்தை குறைத்து, பயனர்களை அலாதியான இசையை அனுபவிக்க வழி செய்யும். இதில் உள்ள அடாப்டிவ் இ.கியூ. அம்சம் தானாக இயங்கி பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் IPX4 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.