இந்தியாவில் அமேசான் ‘பிரைம் டே’ தனது 10-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, மெம்பர்ஷிப் பயனாளர்களுக்கு (ஆண்டு பிரைம் சந்தா ₹1,499-க்கு பதிலாக ₹999 உட்பட) 50% வரை தள்ளுபடி வழங்கி, 500-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்கிறது.
இந்தியாவில் அமேசான் ‘பிரைம் டே’ விற்பனை ஜூலை 4-ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு தொடங்கி ஜூலை 6-ஆம் தேதி இரவு 11:59 மணி வரையில் நடைபெற உள்ளது.
ஸ்மார்ட்போன் வாங்குபவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிரடியான விலை குறைப்புகளையும் சலுகைகளையும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியான சாம்சங் கேலக்ஸி s25 FE 8 ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல், ரூ.60,000 விலையில் அறிமுகமானது.
இதன் விலையில் தற்போது 23% தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.46,200-க்கு அமேசான் பிரைம் டே-வில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று ஒன்பிளஸ் நிறுவனமும், தனது 15 மற்றும் 15R மாடல்களில் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 15R, 12ஜிபி+256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.54,999 விற்பனைக்கு வர உள்ளது.
அமேசான் பயனாளர்கள் ஆக்சிஸ் மற்றும் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு சலுகைகள் மூலம் ரூ.3,000 வரை தள்ளுபடி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் ஃபோன் 4A ப்ரோ பிரீமியம் பட்ஜெட் பிரிவில் பல ஸ்மார்ட்ஃபோன்களுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில், ரூ.34,997 என்று ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளது.