Artificial Intelligence 
தொழில்நுட்பம்

ஊழியர்களை நீக்கிவிட்டு AI-ஐ பயன்படுத்த 10-ல் 9 நிறுவனங்கள் தயார் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு வருகையால் அதிகளவில் ஆட்குறைப்பை செய்து வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு எழுச்சியால் உலகம் முழுவதிலும் தொழில்நுட்ப நிறுவனங்களில் லே ஆப் எனப்படும் பணிநீக்கங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

மனித வேலைகளை மனிதர்களை விட ஏஐ வேகமாக செய்வதாலும் மனிதர்கள் ஏஐ க்கு தகவமைத்துகொள்ளாதபட்சத்திலும் வரும் காலங்களில் வேலையிழப்புகள் அதிகம் இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு வருகையால் அதிகளவில் ஆட்குறைப்பை செய்து வருகின்றன.

இந்நிலையில், வாய்ப்பு கிடைத்தால் ஊழியர்களை நீக்கிவிட்டு முழுவதுமாக AI-ஐ பயன்படுத்த 10-ல் 9 நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ResumeBuilder எனும் ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட சில வேலைகளை துல்லியமாக செய்து முடிக்குமெனில் முழுவதுமாக AI-ஐ பயன்படுத்திவிட்டு ஊழியர்களை நீக்கி நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பெருக்க முடியும் என 500-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.