விளையாட்டு

ஆசிய விளையாட்டு: 24 ஆண்டுகளுக்கு பிறகு கோல்ப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

ஜப்பானில் உள்ள ஐச்சி-நகோயா நகரில் இந்த ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த கோல்ப் போட்டியில், சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஜப்பானில் உள்ள ஐச்சி-நகோயா நகரில் 2026-ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதிகாலையில் தொடங்கி நடைபெற்று வரும் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

தங்கம் வென்று சாதனை

இந்த நிலையில் இன்று நடந்த கோல்ப் போட்டியில், மைசூரை சேர்ந்த 23 வயதான பிரணவி உர்ஸ், 70 புள்ளிகளை பெற்று நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 265 என்ற புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதன்மூலம் கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஷிவ் கபூர் என்பவருக்கு பிறகு, சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இரட்டையர் பிரிவில் வெள்ளி

மேலும், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய போட்டியில், இரட்டையர் கோல்ப் பிரிவில் தீஷா டகர் என்ற வீரருடன் இணைந்து, 546 என்ற புள்ளிகளுடன் இந்திய அணி வெள்ளி பதக்கம் வெல்வதற்கும் பிரணவி உர்ஸ் உதவினார்.

SCROLL FOR NEXT