அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி மே 24 அன்று நடைபெற்ற பிலடெல்பியா யூனியனுக்கு எதிரான ஆட்டத்தில் இடது தொடைப் பின்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஐஸ்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 16 நாட்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கினார். அவரது வருகை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கியுலியானோ சிமியோனுக்குப் பதிலாக மாற்று வீரராக மெஸ்ஸி களமிறங்கினார்.
போட்டியின் 72-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை கோலாக மாற்றி அர்ஜென்டினா அணிக்காக 117 கோல்களை தக்கவைத்தார்.
அவ்வகையில் ஐஸ்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 3-0 என்ற அர்ஜென்டினாவின் வெற்றி உறுதிப்படுத்தபட்டது.
இந்நிலையில் லா அல்பிசெலெஸ்டேவின் வரலாற்றில் "அதிக வயதுடைய கோல் அடித்த வீரர்" என்ற பெருமையை பெற்றார் மெஸ்ஸி.
இதனையடுத்து ஜூன் 16 அன்று உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணி அல்ஜீரியாவை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.