பீடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 12-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ்- உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ஜவோகிர் சின்ட ரோவ் மோதுகிறார்கள்.
சென்னையை சேர்ந்த டி.குகேஷ் நடப்பு உலக சாம்பியன் ஆவார். அவர் 2024-ம் ஆண்டு சீன வீரர் டிங்லிரெனை வீழ்த்தி இளம் வயதில் (18) உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தார்.
சின்ட ரோவ் பீடே கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்றதன் அடிப்படையில் குகேசுடன் மோதுகிறார். இருவருக்கும் 20 வயது தான் ஆகிறது. இதனால் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது குகேஷா?
சின்டரோவா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. குகேஷ் உலக சாம்பியன்ஷிப்பை தக்க வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் நடைபெறுகிறது. முதலில் 7.5 புள்ளிகளை பெறுபவர் சாம்பியன் ஆவார்.
சம புள்ளிகளை பெற்றால் டை பிரேக்கரில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். 27, டிசம்பர் 1, 5 மற்றும் 9 ஆகிய தேதிகள் ஓய்வு தினங்களாகும்.
டி.குகேஷ் 2710 ரேட்டிங் புள்ளிகளுடனும், சின்டரோவா 2782 ரேட்டிங் புள்ளிகளுடனும் உள்ளனர். இருவரும் 2018 முதல் 2026 வரை 7 போட்டியில் மோதி உள்ளனர்.
இதில் சின்ட ரோவ் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார். 2 போட்டி ‘டிரா’ ஆனது. கிளாசிக்கல் பிரிவில் 3 முறை மோதியுள்ளனர்.
இதில் சின்டரோவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்றது இல்லை. 2 ஆட்டத்தில் தோற்றார். ஒரு போட்டி ‘டிரா’ ஆனது. உலக செஸ் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.23.15 கோடியாகும்.