விளையாட்டு

காமன்வெல்த் போட்டியை தவறவிடும் ஈட்டி எறிதல் வீரர்

முழங்கை காயம் காரணமாக இந்தியாவின் பிரபல ஈட்டி எறிதல் வீரரான சச்சின் யாதவ், காமல்வெல்த் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவருடன் சச்சின் யாதவ் என்ற ஈட்டி எறிதல் வீரரும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

காமன்வெல்த் போட்டி

2025 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தார். தற்போது அவருக்கு முழங்கை காயம் ஏற்பட்டுள்ளதால், காமன்வெலத் போட்டியில் இருந்து விலகும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இந்த மாதம் இறுதியில் காமன்வெல்த் போட்டி நடைபெற இருக்கிறது. அவருக்கு இந்தியன் அத்லெடிக்ஸ் சீரிஸ்-3ல் இருந்து காயம் இருந்து வந்துள்ளது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற ரோம் டைமண்ட் லீக்கில் கலந்து கொண்டபோது, காயம் மிகவும் கவலை அடையும் நிலையில் தீவிரமடைந்தது. விரைவில் அவருக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை நடைபெற இருக்கிறது.

2026 ஆசியா போட்டி

மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் 2026 ஆசிய போட்டிக்கான தகுதிச்சுற்று தொடர் ஆகும். இதில் அவர் கலந்து கொள்ள முடியாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.