விளையாட்டு

4-வது ஒரு நாள் போட்டி- சதம் விளாசிய நியூசிலாந்து வீரர் வில் யங்

4-வது விக்கெட்டான வில் யங்- ஆலன் ஜோடி ஆட்டம் அதிரடியாக இருந்தது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 4-வது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கானுவில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

3 மாற்றம்

இந்திய அணியில் 3 மாற்றம் இருந்தது. டெஸ்டில் கவனம் செலுத்துவதற்காக கடைசி 2 ஆட்டத்துக்கு கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக பணியாற்றினார்.

கே.எல். ராகுல், அன்சுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், குல்தீப் யாதவ் இடம் பெற்றனர். முகமது சிராஜ் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். இதேபோல நியூசிலாந்து அணியிலும் பல மாற்றங்கள் இருந்தது.

ஷெய்பெர்ட் அதிரடி

ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த தொடரில் இந்தியா 9 போட்டியில் 8-ல் டாசை வென்றது. வில் யங்கும், டிம் ஷெய்பெர்ட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

நியூசிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஷெய்பெர்ட் அதிரடியாக விளையாடினர். அவர் 39 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 8-வது ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஷெய்பெர்ட் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். நியூசிலாந்து அணி 10-வது ஓவரில் 72 ரன்னை தொட்டது.

பிரார் பிரித்தார்

ஆட்டத்தின் 12-வது ஓவரில் (ஸ்கோர் 85) தொடக்க ஜோடியை குர்னூர் பிரார் பிரித்தார். அவரது பந்தில் ஷெய்பெர்ட் 58 ரன்னில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அப்போது குர்னூர் பிரார் - ஷெய்பெர்ட் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அடுத்து வந்த நிக் கெல்லி 4 ரன்னில் அக் ஷர் படேல் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

அப்போது ஸ்கோர் 96 ஆக இருந்தது. 3-வது விக்கெட்டுக்கு வில் யங்குடன், பாக்ஸ் கிராப்ட் ஜோடி சேர்ந்தார்.

நியூசிலாந்து அணி 15.2 வது ஓவரில் 100 ரன்னை எடுத்தது. இந்த ஜோடியையும் இந்திய பவுலர்கள் நீடிக்கவிடவில்லை. பாக்ஸ்கிராப்ட் 8 ரன்னில் அக்யூப் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

அப்போது ஸ்கோர் 125 ஆக இருந்தது. அடுத்து பின் ஆலன் களம் வந்தார். 4-வது விக்கெட்டான வில் யங்- ஆலன் ஜோடி ஆட்டம் அதிரடியாக இருந்தது.

இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்து ரன்களை குவித்தனர். 28.4-வது ஓவரில் அந்த அணி 200 ரன்னை தொட்டது. அக்ஷர் படேல் இந்த ஜோடியை பிரித்தார்.

ஆலன் 30 பந்தில் 41 ரன் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 10.5 ஓவரில் 100 ரன் எடுத்தது.

மறுமுனையில் இருந்த தொடக்க வீரர் வில் யங் தொடர்ந்து அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 88 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 100 ரன்னை எடுத்தார்.

அவரது 5-வது (67-வது போட்டி) சதமாகும். இந்தியாவுக்கு எதிராக முதல் செஞ்சுரியை பதிவு செய்தார்.

SCROLL FOR NEXT