விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?

4-வது நாளான இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் குறித்த பட்டியல்.

காமன்வெல்த் விளையாட்டில் 4-வது நாளான இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் வருமாறு:-

தடகளம் : பெண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதி சுற்று- பூஜா சிங்.

ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் முதல் சுற்று-யாஷஸ் பலக் ஷா, சந்தோஷ் தமிழரசன்.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்று (ஏ பிரிவு)- முரளி ஸ்ரீசங்கர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங்.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன்.

ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் முதல் சுற்று-தேஜஸ் ஷிர்சே. (பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை).

பெண்களுக்கான பாரா குண்டு எறிதல் (எம் 57 ) இறுதிப் போட்டி -ஷர்மிளா தங்கர் , ஷில்பா ஷைலா.

ஆண்கள் உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டி- சர்வேஷ் குஷாரே, ஆதர்ஷ் ராம் , தேஜஸ்வின் சங்கர்.

ஆண்களுக்கான பாரா 100 மீட்டர் (டி38) இறுதிப் போட்டி- ராகேஷ்பாய் பட், ஸ்ரேயான்ஷ் திரிவேதி.

ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டுதல் - தேஜஸ் ஷிர்சே (இரவு 11.35 முதல் நள்ளிரவு 2.15 வரை).

குத்துச்சண்டை: 60 கிலோ பிரிவில் சச்சின் இங்கிலாந்து வீரருடன் மோதல் (மாலை 4.45 மணி).

80 கிலோ பிரிவில் அங்குஸ் மோதல் (மாலை 6 மணி).

பெண்கள் 51 கிலோ பிரிவில் சாக்‌ஷி சவுத்ரி, போஸ்வானா வீராங்கனையுடன் மோதல் ( இரவு 10.30 மணி).

70 கிலோ பிரிவில் சுமித் குண்டூ, வடக்கு அயர்லாந்து வீரருடன் மோதல் (நள்ளிரவு 1 மணி).