விளையாட்டு

தைபே ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா வெற்றி

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தைவானின் வாங் போ வெய் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, சக நாட்டு வீராங்கனையான தஸ்னிம் மிர் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய தன்வி ஷர்மா 21-16, 22-20 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் இந்தியாவின் அன்மோல் கார்ப், தன்யா ஹேமந்த், தேவிகா சிஹாக் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தியாவின் அஷ்மிதா சலிஹா, ரக்ஷிதா ராம்ராஜ், ஷ்ரியான்ஷி வலிஷெட்டி ஆகியோர் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.