விளையாட்டு

தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தன்யா ஹேமந்த் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-19, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, இந்தோனேசியாவின் தலித ரமாதானி உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய தன்வி ஷர்மா 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் இந்தியாவின் தேவிகா சிஹாக்கும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதா கடேதோங் உடன் மோதுகிறார்.