விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் உன்னதி ஹூடா அதிர்ச்சி தோல்வி

இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகினர்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.

இந்தத் தொடரில் இருந்து இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் விலகியுள்ளனர்.

இந்நிலையில், மகளிர் ஒற்​றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தென் கொரியாவின் கிம் கா-உன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தென் கொரிய வீராங்கனை 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் உன்னதி ஹூடா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தப் போட்டி 37 நிமிடங்களில் முடிந்தது.