விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய திரிசா-காயத்ரி ஜோடி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நடந்து வருகிறது.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி அபார வெற்றி பெற்றது.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.

இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, இந்தோனேசியாவின் ரச்சேல் அலிசா ரோஸ் - பெபி செடியானிங்ரம் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய திரிசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, இரட்டையரில் சாதவிக் - சிராக் ஜோடி ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.

SCROLL FOR NEXT