தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த போட்டியில் இந்தியா கனடாவை எதிர்கொண்டது. இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென், கனடாவின் விக்டர் லாய் உடன் மோதிய முதல் போட்டியில் 21-18, 19-21, 10-21 என்ற செட் கணக்கில் லக்சயா சென் தோல்வியை தழுவினார்.
அடுத்து நடந்த ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யாங்கை, 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி, போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடியும், அம்சகருணன், அர்ஜுன் இணையும் சிறப்பாக ஆடி கனடா இரட்டையர் இணைகளை தோற்கடித்தனர்.
ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, கனடாவின் ஜோசுவா நுகுயெனை 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்திய அணி கனடாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.