ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஷ், 2026 ஐபிஎல் தொடருக்காக லக்னோ அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணி இவரை ரூ.8.60 கோடிக்கு வாங்கியது.
ஆனால் ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற தனது திருமணத்திற்காக நடப்பு சீசனின் முதல் பாதியில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மே 4 அன்று நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணி தற்போது 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ஜோஷ் இங்லிஷின் வருகை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இங்லிஸ், 162.57 ஸ்டிரைக் ரேட்டில் 278 ரன்கள் குவித்திருந்தார்.